ஈரம் வேண்டி-கார்த்திகா

முதுகெலும்பு தேட
ஈரக்குலை காய்ந்து குரங்குகள்
புறப்பட்ட பொழுதில்
இன்னும் தண்ணீருக்குள்
நீச்சல் பழகிக் கொண்டிருந்தன
கிழட்டு முதலைகள்
அதிசயமாய் கரை ஒதுங்கிய
ஆமைகள் பயந்ததில்லை
முதலைக் குட்டிகளின்
பல் இளிப்பிற்கு..
சிறு மீன்கள் துள்ளியது
திமிங்கலங்கள் இரை கண்டன
வாய் திறந்த சிப்பிக்குள்
விழுந்தது மழைத்துளி
முத்திற்கு ஏமாற்றம் இல்லை
சிப்பிக்கு மட்டும் வஞ்சம்
யுகங்கள் புதிதாய்
பிறப்பெடுத்ததில்
முதுகெலும்பு கொண்டவை
மனிதன் என்றானது
இன்னும் அந்தக் கிழட்டு முதலைகள்
ஈரல் வேண்டி குரங்குகளை
சபித்தவண்ணம் தான் இருந்தன!!