அலை கலைத்த சுவடானேன்

அன்று...

கனமில்லாக் காற்றைக் கூட
கரம் பற்றி கடந்திருக்கின்றேன்
கடற்கரை மணல் மீது உன்
கைவிரல் பற்றிய நிமிடங்களில்..

இருள் சூழ்ந்த இடத்தினிலே
இமை மூடிக் கிடக்கையிலே என்
தோல் மறைத்த கருவிழியும் உன்
தோகைமயில் தோற்றம் காணும்..

இன்று...

கூழாங்கல் பட்டு குடி கொண்ட
கூடு கலைந்து கரைந்து கொண்டே
கூட்டமாகப் பதறிப் பறக்கும்
காக்கை போல் ஆனேன்..

கூர்விழி பட்டு குழம்பிப் போன
குடிசை வீட்டு மகனின் இதயம்
கூற்கூறாகச் சிதறிப் பிரியும்
பொய்காதல் நீயென்று ஆனதனால்..

மையல் தந்த மலரே...

மணலாய் கிடந்த என்
மனதினுள்ளே நீ சுவடாய்
மலர்ந்தாய் என்றும்
மறுபிறவியும் உன்னோடே
மணமுடிப்பேன் என்றும்..

குங்குமக் குளத்தில்
குதித்தெழுந்த உன்
உதடுகளால் நீ
கூறிய அனைத்தும்
பொய்யாகிப் போக
நான் மட்டும்

"அலை கலைத்த சுவடானேன்"...



செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (10-Jul-15, 11:58 am)
பார்வை : 282

சிறந்த கவிதைகள்

மேலே