படித்து பாருங்கள்
சொந்தமாக வீடு , கார் என்று வைத்திருக்கின்றார்கள் . ஆனால் சொந்தக்காரர்களை தூரவே வைத்திருக்கின்றார்கள்.
விளையாட்டு பொம்மை வாங்கித்தரும் அப்பாவை விட விளையாடும் பொம்மையாக மாறும் அப்பாவை குழந்தைக்கு அதிகம் பிடிக்கின்றது.
பல பற்கள் சேர்ந்து அரைத்துத் தருவதை ஒற்றை நாக்கு ருசிப்பது முதலாளித்துவத்திற்கு அருமையான ஒரு உதாரணம்.
விமானப்பயணங்கள் விரைவானதாக இருக்கலாம் . ஆனால் ரசித்துப் பயணிக்க அதில் எதுவும் இல்லை என்பது பெரிய குறை.