நான் அழவில்லை

கவலைகள் நிறைய இருக்கின்றன
ஆனால் நான் அழவில்லை

மன உறுதி குலைந்தேவிட்டது
ஆனால் நான் அழவில்லை

விழியோரம் கண்ணீர் முட்டுகிறது
ஆனால் நான் அழவில்லை

என்அழுகை எதிரிகளுக்கு ஆனந்தகளிப்பு
அதனால் நான் அழவில்லை

என்அழுகை பலருக்கு மனநிம்மதி
அதனால் நான் அழவில்லை

என்அழுகை சிலருக்கு கேலிக்கூத்து
அதனால் நான் அழவில்லை

எழுதியவர் : ச.நாகலட்சுமி (10-Jul-15, 6:26 pm)
Tanglish : naan azhavillai
பார்வை : 215

மேலே