உணர்வு
அன்பை வாரி வழங்க
அன்னை உண்டெனக்கு
அரவணைப்பைக் கொடுக்க
ஆற்றல் மிகு தந்தை உண்டெனக்கு
பாசத்தை அள்ளி பொழிய
பண்பான உறவுகள் உண்டெனக்கு
தோல்வி துரத்தும் போது
தோள் கொடுக்க தோழன் உண்டெனக்கு
எத்தனை இருந்து என்ன பயன்
என் ஈழ திருநாடு தமிழன்
என் கையில் இல்லையே?