இளம் தலைமுறையின் தடுமாற்றம்
பாசம் காட்டிய பொக்கை வாய் பாட்டியின் அழகு
முகசாயமிட்ட பேத்தியின் முகத்தில் தெரியவில்லை
பாட்டி தன் பேத்தியை தோளில் சுமந்தாள்
பேத்தி தன் குழந்தையை இயந்திரத்தில் தள்ளி சென்றாள்
பாட்டி அரிசி மாவில் கோலமிட்டாள் முற்றத்தில்
பேத்தி கோலமிட்டாள் ரசாயணத்தால் தன் உடலில்
அன்று பாட்டி அணிந்தாள் கந்தல் ஆடை வறுமையால்
இன்று பேத்தி அரை குறை ஆடை அணிகிறாள் செல்வ செழிப்பால்
பாட்டி தள்ளாடினாள் வயோதிகத்தால்
பேத்தி தள்ளாடுகிறாள் போதையால்
பெற்றொரை வேட்கப்படவைக்கும் இளம் தலைமுறை
போதையால் பாதைமாறும் இளம் தலைமுறை ???