உலகமும் இனித்திடும்​ நீ கேளாய் ​

மலர்ந்திட்ட மலர்களின் இடையே
பிரிந்திட்ட கிளைஒன்றில் தனியே
அமர்ந்திட்ட அழகுமிகு குருவியே !

விரிந்திட்ட விழியுடன் சிந்தனையோ
விட்டுச்சென்ற உறவை எண்ணியோ
விழிநீரும் வழிந்தோடும் நிலையோ !

தனிமை வருத்திடும் கவலையால்
இனிமை குறைந்திடும் உன்குரலால்
வளமை இழந்திடும் உம்வாழ்க்கை !

உறவுகள் திரும்பிடும் காத்திடுவாய்
உவகையும் பெருகிடும் நிச்சயமாய்
உலகமும் இனித்திடும் நீயும்கேளாய் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (11-Jul-15, 9:09 am)
பார்வை : 591

மேலே