குடி கெடுக்கும் குடி

நெறிகெட்ட மனிதனின்
தறிகெட்ட போக்கு
பறிக்கப்படும் பல்லுயிர்
பாரெங்கும் பாழுலகம் ...........

சீரிய வாழ்வு
சிதறும் சிந்தனை
மங்கும் அறிவு
மரணம் சாதாரணம் .........

பொதுநலம் பேசும்
சுயநல மனிதர்கள்
பொதுநல வாழ்க்கைக்கு
பொதுமக்கள் உயிர் பலி ............

காரியஸ்தர்களின் கரைவேட்டிகள்
காலனுடன் கைகோர்த்து
காலமாய் நடக்கிறது
குடியால் கொலைகள் ..........

சாக்கடையை மிஞ்சும்
சாராய கடைகள்
நாற்றத்தை பரப்பும்
நரக மது ............

மனைவி முதல் மாணவிவரை சீரழிந்தும்
அரசின் சிந்தனை மட்டும்
அரசாங்க வருமானத்தை நோக்கி .......

விலைகொடுத்து விபரீதம் தேடும்
விசித்திர மனித கூட்டம்
விளக்கி பயனில்லை
விளங்க மனமில்லை ..........

எழுதியவர் : கவிஞர் சுந்தர .வினாயகமுரு (11-Jul-15, 9:59 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 64

மேலே