தவிப்பு

வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன்
சாலையோர மர பந்தலில்
உன் வருகைக்காக!

காவலுக்கு மின் கம்பம்,
மலர் தூவ மரங்கள் ,
பாட்டு பாட கிளிகள் ,
நடனமாட மயில்கள் ,
சாலையெங்கும் திருவிழா கோலம் தான்
உன் வருகைக்காக !

கிழக்கே சென்ற மேகமும்,
வடக்கே சென்ற தென்றலும் நிற்கிறது
உன் வருகைக்காக !

ஆ !!!!!!!!!!!!!!!!!!

அதோ என் இனியவளின் கொலுசு சத்தம்
உடம்பெல்லாம் சிலிர்க்கிறது!
அவளின் புன்னகை சத்தத்திற்கு

நான் நிற்ப்பது உனக்கு தெரிந்தும்
தெரியாமல் நீ போகும் போது
பாவம் என் விரல் நிகங்கள் கதறி அழுகிறது
என்னை விட்டுவிடுங்கள் என்று

உன் வருகையே எதிர்பார்த்து
கவிதை எழுதிய எனக்கு மிஞ்சியது என்னமோ
கண்ணீர் துளிகள் தான் !

ஏனடி கொஞ்ச கொஞ்சமாய் கொல்கிறாய்?
பார்க்காமல் சென்று விடு
மறுக்காமல் சென்று விடும் என் உயிர்

உன் நினைவுகள் மட்டும் போதும்
நான் உயிர் வாழுவதற்கு.

கல் நெஞ்சக்காரி கரைய மறுக்கிறாய்!

தவித்துக்கொண்டே இருக்கிறேன் இத்தருணத்திலும் !

எழுதியவர் : மடந்தை ஜெபக்குமார் (11-Jul-15, 11:23 am)
Tanglish : thavippu
பார்வை : 151

மேலே