சீக்கிரம் வா

கால்கள் கபடி ஆட
கைகள் புல்லாங்குழல் இசைக்க
புன்னகை பூமி நோக்கி போக
கன்னம் ரெண்டும் கன்னி போக
உணர்ச்சி நரம்புகள் எல்லாம் உச்சி மீது ஏறி குத்தாட்டம் போட
உள்ளுர எதோ பண்ணுதடா உன்னை கண்ட நாள் முதல் ...

புதுமை பெண் தான டா நானும்
ஆனால் ஏனோ இன்னும் அடிமை பட்டு கிடக்கிறேன் உன் கண் என்னும் சிறைக்குள் மட்டும் ..

என்னடா செய்தாய் என்னை வாடி போய் கிடக்கிறேன் உன் வருகைக்காக ....

சீக்கிரம் வந்து விடு என்னை வளமுடன் வாழ வைக்க...

எழுதியவர் : வாசு (11-Jul-15, 11:33 am)
பார்வை : 177

மேலே