மழை நடுக்கம்
பலத்த மழையோ இடியுடன் கூடிய மழையோ
பெய்ய வாய்ப்பு என்று சொன்ன
ரமணனை அலட்சியபடுத்தியதாலோ?அம்மா கொடுத்த குடையை
நான் வாங்காமல் வந்ததனாலோ?
என் வயல் செழிக்க மழை வேண்டும் -என்ற
விவசாயியின் வேண்டுதல் தாமதமாய் இறைவணை சென்றதனாலோ ?
புதுசாய் வாங்கிய என் லெதர்ஷூ
தாரோடும் சேறோடும் உள்ள சாலையில்
பாலிஸ் செய்யப்படுவதற்கோ?
திடீரென மழைக்குண்டுகளை கொட்டியது கார்மேக பீரங்கிகள்
மழையுடன் இருட்டும் தனிமையும் சேர்ந்தே இருந்ததால்
பயமும் இலவச இணைப்பாய் தானே வந்தது
அறுந்து கிடக்கும் மின்கம்பி தாக்கி
பொசுங்கிவிடுவேேனா? என நடுங்கியது நெஞ்சம
்
வெட்டி கிடந்த ஒற்றைக்குழியோ என்
உயரத்திற்கே வெட்டிய சவக்குழியாய் எண்ணி பதறியது கொஞ்சம்
கர்கர் என குரைக்கும் தெரு நாயோ என்
தொடைக்கறியை கவ்வப்பார்ப்பதாய் மனதில் படபடபடப்பு
விட்டு விட்டு எரியும் மின்னல் ஒளி என்
கண்பார்வையை
பறித்திடுமோ என ஒரு கவலை
கடிந்து ஒலிக்கும் இடிசத்தம் கேட்டு
துடிக்கும் இதயம் வெடிக்கத் தொடங்கியது
பல்வேறு பயங்களை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு
முறுக்கிய மீசையின் நடுக்கத்தை மறைத்துக்கொண்டு
வாகனங்கள் வாரியடித்த சேற்றோடும்
அஞ்சியவனெல்லாம் கோளையல்ல என்ற கூற்றோடும்
கட்டபொம்மன் பேரனாய் வீரநடை போட்டேன்.
-சுஜீத்