வேதனை வேதனை

பள்ளி சென்றிட பாடங்கள் படித்திட
ஆசை உண்டு எனக்கு,
படித்திட வசதி இல்லை
படிக்க வைப்பர் யாருண்டு ?

ஒரு நிமிடம் வெடித்து காகித
குப்பைகளாக மாறும்
பட்டாசிற்கு இருக்கும் மதிப்பு
என் கல்வியின் மீது ஒருவர்க்கும்
இல்லாது போனதேன் ?

ஒரு ஏழை சிறுமியின் பார்வை .....

எழுதியவர் : பிதொஸ் கான் (11-Jul-15, 1:38 pm)
பார்வை : 59

மேலே