பாமரம்

கடல் நீரில் மிதந்தால்
பாய்மரம்
பூமியில் நெட்டையாய் நின்றால்
நெடு மரம்
ஏமாந்து வாக்களித்து
இளித்த வாயனால் நின்றால்
பாமரம்
பா மரம் என்று பிரித்தால்
பாக்களில் பூத்துக் குலுங்கும்
கவிஞர்கள் நாம்தான்
முன் வரியினரைப் பின் பற்றினால்
நாமும் பாமரம்தான் !
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Jul-15, 10:19 pm)
Tanglish : paamaram
பார்வை : 115

மேலே