தமிழனுக்கு ஓட்டு போடுங்க

த மி ழி ன ஓ ட் டு

பூப்பூவாய் பூத்திருந்த
பூமியிலே ஓர் தமிழ் ஈழம்

காதலிக்க நாதியற்ற
கானகத்தில் காத்திருந்த
தேசமதை புகழ்மணக்க
திருத்திட்ட தமிழ் மனங்கள்
பாசமென்று மனமொப்பி
மோசங்கொண்டு போனதய்யா!!!

சிங்களன் எனும் மானிடனும்
சிந்தனைகெட்ட மனதுடனே
மானங்கெட்ட நாய்கள்போல
நாட்டைவிட்டு ஓட்ட எண்ணி
ஞானம் கொண்ட தமிழ்மணியை
ஞாலமெங்கும் விரட்டியதையா !!!

அறணை கெடுத்த மாந்தரவன்
சுரணை கெட்டு போய்விடவே
அழகுகாக்கும் பெண்மணியை
அழுக்காய் கசக்கி பொசுக்கிவிட்டு
அமுதம் பிஞ்சு மழலைகளை
அழித்து வீசி விட்டானையா !!!

திறனை கெட்ட கோழையவன்
முரணாய் முரட்டு நெஞ்சோடு
மலர்ந்த மண்ணும் சிவந்துபோக
உலர்ந்த நெஞ்சை பிளந்துவிட்டு
வீரமின்றி முதுகில் குத்தி
சோரமாக்கி போனானையா!!!

சோலைவன நாட்டை வெட்டி
பாலைவன இடுகாடாக்கி
ரணம் தின்னும் கழுகுபோல
குணமற்ற பேய்கள் ஆகி
பிணம் குவித்த பாதகன்கள்
மோசம் செய்துவிட்டானையா !!!

பிஞ்சு உள்ளம் கனவுகள் எல்லாம்
நஞ்சுக் கொடி படர்ந்த தையா!!!
கண்ணித்தமிழ் கனவுகள் ஆயிரம் கற்பு சூரை போனாதய்யா !!
நெஞ்சு நிமிர்ந்த தமிழன் அங்கே
வஞ்சக்கொலை யுண்டானையா!!!

பாசம்கொண்ட மலர்கள் பாதி
காற்றில் கரைந்து போனதையா!!!
நேசமிக்க தமிழனங்கே பாவம்
ஈழதேசமின்றி போனானையா!!!

ஐ.நா. மன்றம் இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்று சர்வதேச நீதிமன்றத்தில் நிரூபிக்க உலகெங்கும் குறைந்தபட்சம் 10 இலட்சம் வாக்குகள் வேண்டியுள்ளது... நம் இனத்திற்கு நடந்த கொடுமைக்கு நாம் எதுவும் செய்யமுடியவில்லை என்றாலும் ஒரு நிமிடம் அதற்காக ஒரு ஓட்டு போட்டு தமிழினத்துக்கு கை கொடுப்போம்.....
வலைத்தளத்தில் உங்கள் ஓட்டு பதிவு செய்யுங்கள்..
ஒரு நிமிடம் போதும்.

பிரியமுடன்
அசுபா....

எழுதியவர் : அசுபா (12-Jul-15, 10:01 pm)
பார்வை : 160

மேலே