புதுக்கவிதை

புதியதொரு நாளின்
துவக்க ஆட்டக்காரனாக
புன்னகைக்கும்
பூபாளம் ..
புரியாதவற்றைக்கூட
புத்தியில் படுகிற மாதிரி
சொல்லித்தரும்
அன்றைய அனுபவங்கள் ..
கோப்புகளின் ஊடாக
கோர்க்கப்பட்ட
கிழியாத காகிதங்கள்..
தட்டினால்
கண்ணில் தெரியும்
நினைவு நேர்க்கோடுகள் ..
அனைத்தும் வரிகளாகி
வாழ்க்கையின் கவிதைக்கு
வழி செய்ய..
ஒரு புதுக்கவிதை
உருவாகிறது ..
இலக்கணம்
இருந்தாலும்..
இல்லாவிட்டாலும் !

எழுதியவர் : கருணா (12-Jul-15, 10:21 pm)
Tanglish : puthukkavithai
பார்வை : 86

மேலே