சுயநலம் பாடும் வீணர்கள்

சுயநலம் பாடும் வீணர்கள்

​கொண்ட தலைவனுக்காய்
வந்தனம் செய்து
தந்தனத்தோம் பாடும்
சிந்தனை சுருங்கிய
சிதரல்கள் இவர்கள்!!

பந்தம் இழந்து
சந்தம் மறந்து
சுயநலம் பாடும்
கந்தையாகிப் போன
வஞ்சக உள்ளங்கள்!!

மருந்தாய்ச் சொன்ன
விருந்தான உரையினை
சிந்தை கொள்ளா
மழுங்கிப் போன
ஈனம் கொண்ட பிண்டங்கள்!!

எழுந்து நடந்து
உண்மை அறிந்து
சிந்தை தௌிந்து
புரிந்திட மறுக்கும்
பண்பில் கீழான விசித்திரங்கள்!!

நல் மொழி இயம்பி
நலம் பெறச் சொன்னால்
கண்ணிமை மூடி
செவிப்புலன் அற்றுப் போன
ஊணங்கள்!!!

ஜவ்ஹர்

எழுதியவர் : ஜவ்ஹர் (13-Jul-15, 12:39 pm)
பார்வை : 247

மேலே