நான்
இது எனக்கான கேள்வி...
பதில் எனக்கு மட்டுமே தெரியும்...
நீ
யாரடா யாசிப்பவர் கேட்கும் போது ..
கொடுக்க ஒன்றும் இல்லை என்றால்
உன் நெஞ்சை ஏன்
குத்தி கொள்கிறாய்...
நீயே பூரணம் இல்லாதவன்..
பிறர் பூரணம் ஏன் தேடுகிறாய்...
உன் முழுவதும் வெறுமையும், கருமையும் இருக்கும் போது நிழல்களுக்கு வண்ணம் தீட்டுகிறாய்....
எல்லாருடைய கண்ணிலும் சூரியனையும்...
கைகளில் சிகப்பையும் பார்க்க
ஆசை படுகிறாய்....
தனியாக கோபம் கொள்கிறாய்...
எல்லாரையும் போல நீ ஏன் வேடிக்கை பார்க்க மறந்து விடுகிறாய்....
யாருக்கு வலிததாலும் நீ அழுவது ஏன்....
யாருமே நீ எழுதுவதை படிப்பதில்லை என தெரிந்தும் பக்கம் பக்கமாய் எதை எழுதுகிறாய்.....
உன் இயலாமை
உனது கைகளை கட்டி போட்டு இருக்கும் போதே..
யாருக்காவது கை கொடுக்க ஆசை படுகிறாய்....
முட்டாளே நீயே உனக்கு அன்னியமாய் இருக்கும் போது...
யாரடா நீ......
.....மஞ்சள் நிலா 🌙