இமயமளவு புகழுடன் வாழ்ந்திடு

வளையணிந்த கரங்கள் வாழ்த்திட
--ஓவியமாய் ஒருமுகமோ ஒளிர்ந்திட
கைவலைக்குள் சிக்கிய நிலவாய்
--சிரித்திடும் சிலைதான் சித்திரமாய் !

கவின்மிகு கரங்களின் வண்ணங்கள்
-- எழிலார்ந்த நெஞ்சின் எண்ணங்கள் !
இத்தாமரையை கண்ட இதயங்கள்
-- இசைத்திடுமே இனிமை கீதங்கள் !

மலர்ந்திட்ட முகத்தைப் பார்த்தால்
--புலர்ந்திட்ட பொழுதும் புனிதமாகும் !
புன்னைகை உணர்த்திடும் எவருக்கும்
--புவியில் தாம்பிறந்த பலன்தன்னை !

பெண்ணரசி கலையரசி அழகரசியே
--மண்ணரசி மாதரசி நீவாழியவே !
இவ்வுலகில் இன்பமுடன் வாழ்ந்திடு
--இமயமளவு புகழுடன் வாழ்ந்திடு !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (14-Jul-15, 9:17 pm)
பார்வை : 248

மேலே