கர்மவீரர் காமராஜர்
இன்று (ஜூலை 15) கர்மவீரர் காமராஜர் பிறந்த தினம். 60 களில் பள்ளியில் படித்த போது, அன்றைய முதல்வரான காமராஜர் எங்கள் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் தேக்க தொட்டியை திறந்து வைக்க வந்திருந்தார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது ஒரு மர மேசை, அதன்மேல் டீ டம்ப்ளரில் மணல் நிரப்பி புகையும் ஊதுவத்திகள் சொருகி வைக்கப்பட்டிருந்தன. இது தான் அன்றைய ஒரு முதல்வர் கூட்டத்தின் மேடை அலங்காரம். நீர்தேக்க தொட்டியை திறந்து வைத்து எங்களிடையே பேசிய முதல்வர், பின்னர் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு ஏரியின் உள்ளே இறங்கி தூர் வாருவது குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இப்படி ஒரு எளிமையான முதல்வரை நாம் இனி பார்க்கவே முடியாதா? என்ற ஏக்கம் என்னில் எழுகிறது. வாழ்க பெருந்தலைவர் புகழ்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
