மகிழ்வீர் மகிழ்விப்பீர்

பேரறிஞர் களின்கருத் துக்களை
மனதில் நிறுத்திநான் வாழ்வில்
பெற்றயென் அனுபவங் களையும்
கற்றயின் தமிழையும் சேர்த்து; 1
கலைமகள் சரஸ்வதி அருளால்
இனியசொற் களைத்தேர்ந் தெடுத்து
இங்கேநான் படைக்கிறேன் கவிதை;
ஏற்றமிருப் பினேற்று மகிழ்வீர்! 2