கஜல்- 3
புது ஓளி விளைந்தது உள்ளத்துக்குள் உன்னால்
புது ஒலி இசைந்தது எண்ணத்துக்குள் உன்னால்
இனி நான் சுகம் பெறவே, காதல் காட்டும் ஓர்
நல் வழி தெரிந்தது ஞாலத்துக்குள் உன்னால்
நமதுறவு நற்கனியே தானன்றோ? அன்பே,
சாரம் சுரக்குது பந்தத்துக்குள் உன்னால்
கனிய இனிமை, மதியின் நெஞ்சம் சீராகும்
விலிமை மலர்ந்தது ரத்தத்துக்குள் உன்னால்
பொலிவை பதித்தது நீ தானே என்னுள்ளே
இல்லம் கிடைத்தது காலத்துக்குள் உன்னால்