உன் சரணம் இனி..

நம் காதலால் நமக்குள் கருவுற்ற கவிதை மிச்சங்களை
மாலையாக்கி உனக்குச் சார்த்துகிறேன்..
எனக்குள் அலைந்து திரியும் ஏக்கங்கள் உன்னை
ஏதும் செய்துவிடலாகாது என்று
பிரபஞ்சக் காதலுக்கு அதனைப் பிரதிநிதி ஆக்கினேன்..
ஆனால்,
உன்னைத் தழுவிக் கிடப்பதை விடவா
உலகக் காதல் பெரிது என்று
என்னையே எதிர்த்துக் கேள்வி கேட்கின்றன அவை..
என் காதலும் கவிதைகளும் உன் சரணம் இனி..