இரவும் பகலும்

இரவில் தோன்றும் நிலவு
பகலின் ஒளியை கதகதப்பை
எண்ணிப் பொறாமை கொள்கிறது;
பகலைப் பார்க்கத் துடிக்கிறது. 1

காலையில் உதிக்கும் கதிரவனோ
இரவுக் காகவும், அதுதரும்
தனிமைக் காகவும்ஏங் குகிறது;
இரவைக்கா ணமேற்கே விரைகிறது. 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jul-15, 12:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 95

மேலே