செயற்கை இதயம்

இதயத்தில் கோளாறு என்றால் இனி கவலைப்படத் தேவையில்லை. ஆமாம்... வந்தாச்சு செயற்கை இதயம்! உடல் முழுவதும் ரத்தத்தை சப்ளை செய்யும் மோட்டார் ரூம் போலவே இதயம் செயல்படுகிறது. ‘இந்த மோட்டார் ரூம் வேலையை ஒரு மெஷினை வைத்தே செய்துவிடலாமே’ என்று யோசித்த ஆஸ்திரேலிய விஞ்ஞானி டேனியல் டிம்ஸ், இப்போது அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார். 1991ல், குயின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட இந்த ஆய்வு இப்போதுதான் நிறைவு பெற்றுள்ளது.

அதிநவீன எலெக்ட்ரானிக்ஸ் தொழில் நுட்பத்தில் செயற்கை இதயம் ஒன்றை டேனியல் டிம்ஸ் உருவாக்கியிருக்கிறார். இது, நிமிடத்துக்கு 2 ஆயிரம் தடவை சுழன்று உடல் முழுவதும் ரத்தத்தை பாய்ச்சும் திறன் கொண்டது. பரிசோதனை முயற்சியாக ஒரு செம்மறி ஆட்டின் இதயத்தை அகற்றிவிட்டு, இந்த இதயத்தைப் பொருத்திப் பார்த்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அந்த ஆடு இப்போது ஆரோக்கியமாகவும் உள்ளதால், ‘அடுத்ததாக மனிதர்களிடம் இதற்கான சோதனை முயற்சி நடைபெறும்’ என உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். இதயம் பழுதானால், இனி வண்டிக்கு ஸ்பேர் பார்ட்ஸ் மாற்றுவதுபோல மாற்றிக்கொண்டு, அடுத்த வேலையைப் பார்க்க கிளம்பிவிடலாம். மனித இதயம் போல இந்த எலெக்ட்ரானிக்ஸ் இதயம் துடிக்காது.

## நன்றி தினகரன்

எழுதியவர் : சேர்த்தது (16-Jul-15, 3:32 pm)
சேர்த்தது : தமிழ்வாசன்
Tanglish : seiyarkai ithayam
பார்வை : 309

சிறந்த கட்டுரைகள்

மேலே