பித்தனின் கிறுக்கல்

வார்த்தைகள் அற்ற வருணனை தான் என் வருணனை
உன்னை வருணிக்க எண்ணி காகிதம் கிழித்தேன்....
காகிதம் கிழிய மறுக்கிறது....
உன்னை வருணிக்க வார்த்தைகளற்று நான் நிற்பது என் மனமன்றி காகிதமும் அறிந்ததோ?
சிறு சலசலப்பிற்கு பிறகு என்னிடம் வந்து பித்தனே..
அவளை தீண்டிய உன் கரங்கள் எனை தீண்டும் என்றே உன்னை சேர்ந்தேன் என்றது
உன் முதல் தீண்டளின் நியாபகம் மின்னி மறைந்தது
என் எழுத்தில் திடீர் மாற்றம்....
என் விரல்கள் எழுத மறுக்கிறது
என் விழிகள் உன் மான்விழி அன்று வேறொன்றை காண மறுக்கிறது
நொடிகளில் உன் சுவாசம் எனை உரசி செல்கிறது
மூச்சற்ற நிலையிலும் உன் மின்னல் பார்வையும்,கூர் நாசியும்,
படர்ந்திருக்கும் சேலை மறைவின் அழகும்,விலை இல்லா உன் சிரிப்பும்
எனை பார்த்து பித்தனே எனை வருணனை செய்தாயோ என சிரிப்புடன் கடக்கிறது

எழுதியவர் : சத்யாதுரை (16-Jul-15, 10:59 pm)
Tanglish : piththanin kirukal
பார்வை : 131

மேலே