துணி ஏலக்காரா்

முதல் சாமத்திற்கு
முந்தைய இரவொன்றில்,
காடா விளக்கின் சாட்சியில்
அடா் கருப்பு நிறத்தில்
சுற்றிலும் சிவப்பு வெள்ளைக்
கோடுகள் பரவிய
மம்பட்டியான் போர்வையொன்றை
காற்றில் பறக்கவிட்டு
விரித்தாா் ஏலக்காரா்...

தந்தையின் கைமறைவில் நின்றிருந்த சிறுவன் நான் ,
அப்போா்வையின் ஈா்ப்பில்
தந்தை கைவிலக்கி முன் வந்தேன்...

கூவிக் கூவிக் கொள்வாா் இன்றியே
அதன் பின்னும்
மூட்டைக்குள் போனது
ஏலப் பொருட்களனைத்தும்...

ஏலம் போகாத கோபத்தை
பச்சை சிவப்புக் கோடுபோட்ட
போா்வையில் காட்டித் தரையில் எறிந்தாா்...
அதை எடுக்க சனங்கள் முட்டிமோதிக் கொண்டது....

எனக்கோ
மம்பட்டியான் போா்வையை
அப்படி வீசாத கோபம் நெடுநாள் இருந்தது...!

எழுதியவர் : பட்டினத்தாா் (16-Jul-15, 11:00 pm)
பார்வை : 112

மேலே