ஒரு காத்திருப்பிற்கு பிறகு
தலை..
கழுத்து..
முதுகுத்தண்டு..
ஒரே நேர்க்கோட்டில்..
தலையை..
அவ்வப்போது..நிமிர்ந்து..
சாய்த்து..
மூன்று ..நான்கு
நிமிடங்களுக்கு
அசையாமல்..
பார்வையை
ஒரே இடத்தில் நிறுத்தி..
மூச்சை இழுத்துப் பிடித்து ..
தியானம் செய்தபின்
விசுக்கென்று
எம்பி..
அருகில் வந்த இரையை
கபளீகரம் செய்தது
ஓணான் ..
காத்திருந்து
பழி வாங்கும்
மனிதன் எவனாவது
கற்றுக் கொடுத்திருப்பானோ ?