​மெல்லிசை மன்னருக்கு இதய அஞ்சலி ​

​மறைந்தது மெல்லிசை மண்ணிலே
--கலந்தது நல்லிசை காற்றிலே !
உறைந்தது உள்ளங்கள் உலகிலே
--வழிந்தது விழிகள் வருத்தத்திலே ​!

இசையால் இதயங்களை கவர்ந்தவனே
--இசையுலகை ஆண்ட மன்னவனே !
இசைமழை பொழிந்திட்ட கார்முகிலே
--இசையே அழுகிறது உன்பிரிவாலே !

மெல்லிசையே உம்மை நேசித்தோம்
--தேனான உன்இசையை சுவாசித்தோம் !
திரையினில் இசையினை வாசித்தாய்
--திரும்பிவா எனநாங்கள் யாசிக்கிறோம் !

உடலால் மறைந்தாலும் வையத்தில்
--தமிழர் உள்ளத்தில் வாழ்ந்திடுவாய் !
உந்தன் பேரும்புகழும் நிலைத்திடும்
--உயிர்மூச்சாய் உள்ளத்தில் உலவிடும் !

மெல்லிசை மன்னருக்கு என் இதய அஞ்சலி !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (17-Jul-15, 6:51 am)
பார்வை : 231

மேலே