ரவுடிகளின் கவலை
ரவுடிகளின் கவலை
நோஞ்சான் ரவுடிக்கும்
ஜிவ்வென்று வீரம் வரும்
மதுவெனும் அமுதம்
உள்ளே சென்ற பின்னே.
மதுவை ஒழிக்க
உறுதி பூணும் உள்ளங்களே
எங்கள் வீரத்தை நசுக்கும்
பாவத்தைச் செய்யாதீர்!
போராட்டம் யார் நடத்தினாலும்
அழைப்பின்றிப் பங்கேற்று
வன்முறையை அரங்கேற்றி
மக்களை அச்சுறுத்தும்
எங்களையேன் சிதைத்திட
உங்களுக்கு ஆசை?
பாதி வீரம் தொலைத்த பின்னே
பரதேசிக் கோலத்தில்
அலைவோம் நாங்களென்று
பகற் கனவு காணாதீர்?
அரசியல்வாதிகள் எல்லாம்
நல்லவராய் மாறும் நாளில்
நாங்களும் மாறிடுவோம்
நாடு போற்றும் நல்லவராய்!