விழியின் விழைவு

விழியே... விழியே...
வேண்டுதல் ஏனோ..?
புவியின் செவியில்
புலம்பல்தானோ...?
வீசுதென்றலும்
வீங்கிள வேனிலும்
மாசிலா குழவியும்
மலைவீழ் அருவியும்
பேசிடும் பறவையும்
பார்சூழ் பரவையும்
நீசனின் பார்வையில்
நிலைத்திடதானோ...?