இயற்கையோடும் கனவோடும் துளிப்பாக்கள்
அழகு நிலவு
முழுமையாய் காண இயலவில்லை
நிலவுக்குள் நான்..!!
o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o
நிலவினை செதுக்கியபோது
சிதறிப் பரவிய துகள்கள்
நட்சத்திரங்கள்....!!
o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o
வானில் வண்ண சித்திரங்கள்
கலைத்துவிட்டுப் போகிறது காற்று
மேகங்கள்...!!
o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o
யார் கற்றுக் கொடுத்தார்கள்
கஞ்சத்தனத்தை மழைக்கு
தூறல்....!!
o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o
சாதி மதம் பார்ப்பதில்லை
எல்லோரையும் வாழச் செய்கிறது
காற்று...!!
o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o
கும்மிருட்டு
துணைக்கு வர மறுக்கிறது
என் நிழல்...!!
o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o
மழையின் வரவு
கட்டியங் கூறுகிறது வானம்
இடி....!!
o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o
முதலீடு ஏதும் போடவில்லை
நிறுவன முதலாளியாக்கிவிட்டது
கனவு...!!
o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o