உனக்கு மட்டுமே தெரிந்த மொழி

      உனக்கு மட்டுமே தெரிந்த மொழி

உனக்கு மட்டுமே தெரிந்த மொழி 
காற்றின் மொழி நீயேதான்

உனக்கு மட்டுமே தழுவ தெரியும்
எனக்குத் தெரியாமல்
நழுவவும் தெரியும் தொடர்ந்து
உலகில் நீ தான் உயர்ந்த சாதி
புல் பூண்டு முளைக்கும் முன்னே

உனக்கு மட்டுமே தெரிந்த மொழி
காற்றின் மொழி நீயே தான்

புவிப் பித்தனில்நீ யும் நானும் கண்கள் காணாத காட்சியில்
இன்னும் உயிரோடுதான்
நீ எந்த இடத்தில் பிறந்தாயோ?
நீ எந்த புள்ளி யில் இருந்து தோன்றினாயோ?

உனக்கு மட்டுமே தெரிந்த மொழி
காற்றின் மொழி நீயேதான்

உருவமில்லை எதுவும் என்றே
என்னை உருவாக்கினாய் உருவமாய்
உணர்வு வீணையை மீட்டிவிட்டு
உன் விரல்களால் என்னை அணைக்கின்றாய் எப்படி?

உனக்கு மட்டுமே தெரிந்த மொழி
காற்றின் மொழி நீயேதான்

உனக்கு எத்தனை எத்தனை இதயம்
உனது சுவாசம் எத்தனை எத்தனை கோடி கோடி இதயங்களில்
அத்தனையும் வாசத்தோடு மனதில் 
ஆயிரமாயிரம் மணங்க ளாக
ஈர்க்கிறதே எப்படி?

உனக்கு மட்டுமே தெரிந்த மொழி
காற்றின் மொழி நீ யேதான்

எத்தனை எத்தனை கோடி ஆண்டுகளாக இன்னும் இன்னும்
எத்தனை யுகங்க ளாய் புரிய வைக்கின்றாய்
உயிர் மொழி ஒன்றுதான் என்று...

உனக்கு மட்டுமே தெரிந்த மொழி
காற்றின் மொழி நீ யேதான்

எங்க  ளுக்கெல்லாம் ஒரே பாடமாய்
யுகங்கள் தாண்டியும் உயிர்பாடமாய்
ஊட்டி மகிழ்கின்றாய் நீ 

உனக்கு மட்டுமே தெரிந்த மொழி
காதல் மொழி நீ யேதானென்று

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (19-Jul-15, 11:02 am)
பார்வை : 157

மேலே