ஏக பாத அந்தாதி
தாமோ தரனே தாமோ தரனே
தாமோ தரனே தாமோ தரனே
தாமோ தரனே தாமோ தரனே
தாமோ தரனே தாமோ தரனே
பொருள்;- தாமோதரனே தாம்+ஓது+அரனே, தாமோதரனாகிய கண்ணன் ஓத தாமோ தரன் தம் தரன் –தமக்கு நிகராக தாமோ+தர தாமே இடத்தைத் தர முன்வந்து சங்கர நாராயணராக திகழ்கிறார்
தாமோ தரன் –தாம்புக்க்யிற்றில் உரலில் கட்டுண்ட கண்ணனின் தாம்+உதரனே , உந்திக் கமலத்தில் உதித்த அயனே தாமோ+தரன், சிவனுக்கு தானும் தரன்(ஐந்து முகமுண்டு) என்று கர்வப்பட்டு தாம் மோத அரன் , தாமோ தரன் என்று அவர் தம் தலையைக்கிள்ளி கர்வபங்கம் செய்தான்
பொருள்; தாமோதரனாகிய கண்ணனும் தாமோதரன் தன் உதரனாம் அயனும் தாமோ தரன் என போட்டியிட தாமோ தரனென லிங்கோத்பவராக அனல் மலையாக நின்று நிரூபித்தார்
தாமோதரனாகிய பெருமாள் ராமனாக நரனாக அவதாரம் செய்தபோது அந்த தாமோதரனுக்கு தாம்மோத அரனாக வானரனாக வந்தான் அந்த வான் அரன்
மதிப்பிற்குரிய மரு.கன்னியப்பன் அய்யா கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த ஏக பாத அந்தாதியை பாடியுள்ளேன் இது ஏகபாத அந்தாதி மட்டுமே. என்னை எழுதத் தூண்டிய மருத்துவர் அய்யா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி ,இதில் மாற்றங்கள் திருத்தங்கள் இருப்பின் செய்து தரும்படி திரு கருமலைத்தமிழாழன் ஐயா அவர்களையும் திரு எசேக்கியல் காளியப்பன் ஐயா அவர்களையும் மருத்துவர் ஐயா அவர்களையும் இன்னும் தமிழ் தேர்ந்த நண்பர்களையும் கேட்டுக்கொள்கிறேன்….இது தொடக்கம் தான் தொடர முயல்கிறேன்