மரணம் மட்டுமே நிச்சயமாய்

தினம்
வெந்து வெந்து...
மனம்
நொந்து நொந்து ....
பணம் தேடி
பதவி நாடி
பகட்டு கோடி -
சேர்க்க
நித்தம் ஓடி ....
வருடம் ஐநூறு
வாழபோவதாக
எண்ணி -நற்
பொழுது இன்று
கொன்று ,,,!!
மண்ணோடு மகிபோகும்
இந்த முடிவுறைக்குள்
எத்தனை எத்தனை
வன்முறைகள்..??
பிரிவுரைகள் ,,??!!

ஜாதி என்று
மதம் என்று
பணம் என்று
பாசம் என்று
காதல் என்று
கருவறை முதல்
கல்லறை வரை
எத்தனை வேஷங்கள்..??
பெற்ற பிள்ளையோ -உன்னை
பெற்ற பெற்றவர்களோ
சேர்த்த சொத்தோ
சேர்ந்த சொந்தமோ
வாங்கிய பொருளோ
வந்த பதவியோ
நீ சென்றால்
துணை வருவதில்லை ....!!!
மரணத்தை மட்டும்
நேசிக்க கற்றுகொள்
மற்றவை எல்லாம்
நிரந்தரம் அல்ல ...
மரணத்தை தவிர
என்பதை புரிந்துகொள் ..

மெழுகுவர்த்தியாய்
உருகும் இந்த வாழ்வுதனில்
உன் ஒளி அடங்கும் முன்
உன் நற் பெயர்தன்னை
விட்டுச்செல் இவ் பூவுலகுதனில் ...

என்றும்..என்றென்றும் .....

எழுதியவர் : ஜீவன் (20-Jul-15, 6:28 am)
பார்வை : 81

மேலே