கனவிலும் நினைக்கவில்லை
நான் ..
உன்னை விரும்புகிறேன்..
நீயும் ..
விரும்புகிறாயா..
உடன் பதில் தரவும்..
இந்த கடிதம் கொண்டு வரும்
எனது உயிர் நண்பனிடம்..!
உன் பதிலில்தான் ..
எனக்கு ..
நாளை பொழுது விடியும்..
அன்புடன்..
உன்
புருசோத்து ..
..
பதினாலு வயதில் ..
சீனியர் நண்பனின்
மிரட்டலுக்கு பயந்து ..
சொந்தக் கற்பனை சேர்த்து
எழுதிக் கொடுத்த
கடிதம்..
வாங்கித் தந்த
அடி..
..
அப்போதைக்கு
வலி தந்தாலும்..
பின்னாளில் ..
அடி வாங்காத அளவுக்கு..
கவிதைகள் கூட எழுத வைக்கும்
என்று கனவிலும் நினைக்கவில்லை!