புதுக் கவிதைகள் சில
நினைவெல்லாம் நீ தானே...!!!
எங்கே தான் போனாயோ சொல்லாமலே,
நீயின்றி நானும் இங்கே இல்லாமலே,
என்ன தான் செய்வதோ புரியவில்லை,
ஏனோ தவிக்கிறேன்
புரியாமல் இருக்கிறேன்..!!!
முன்னும் பின்னும் உன்னை எண்ணி நடந்தேன்,
கால்கள் பின்னிக்கொண்டு விழுந்தேன்,
கண் இருந்தும் இல்லை உணர்ந்தேன்,
இது புதிதாய் வந்த நோயா..??
இல்லை என்னை பிடித்த பேயா..??
யாரோ எவரோ உன்னை பற்றி சொல்ல,
என்னுள் காதல் பற்றி கொள்ள,
உயிர் இருந்தும் எங்கோ செல்ல,
நான் உன்னுள் வந்தேன் மெல்ல,
இது தானே நடந்த மாற்றம்..!!!
உன் நினைவலையில் நான்
எனை தொலைத்தேன்,
அதற்காக வருந்தவில்லை...!!!
வானம் பூமி எல்லாம் தேடி பார்த்தேன்,
உன்னை காணவில்லை தோற்றேன்,
உயிர் கூச்சல் போட கேட்டேன்,
என் விதியை திட்டி தீர்த்தேன்,
இருந்தாலும் நீ வர காப்பேன்..!!!
காற்றும் பூவும் உன்னை போல இருக்க,
தினம் என்னை நானே வெறுக்க,
முடியவில்லை உன்னை மறக்க,
இது யார் செய்த பிழையோ,
இப்படி இருப்பது தான் என் நிலையோ..??
என் கனவுக்குள்ளே
நான் விழித்திருப்பேன்,
அது உனக்காக மட்டுமே...!!!
பள்ளிப்.பருவம்
பள்ளி என்பது பூந்தோட்டம்
பூக்கள் யாவும் பிள்ளைகள்
வீசும் தென்றல் வாத்தியார்
வாசம் என்பது தமிழ் மொழி
அடுத்த வகுப்பில் கூவும் குயில்
அழகு தமிழ் சக மாணவர்...
அருமை அருமை பள்ளிப் பருவம்
அதுதானே இன்பப் பருவம்....!!!!
கவலை ஏதும் நெஞ்சில் இல்லை
காற்றில் பறக்கும் மென்மை மனசு
கடவுளே என்னை மீண்டும் நீ
கணத்தில் மாற்று பிள்ளையென...
முல்லை என நான் சிரிப்பேன்
முழு நேரமும் மகிழ்ந்திருப்பேன்
இல்லை ஏதும் பகை என்றே
இனிய உலகை ரசித்திருப்பேன்....!!!!
என்னை அழைக்கிறது ...!!!
இப்போதெல்லாம் ...
நீ பேசாமல் விட்டால் ...
என்னை விட ...
கவலைப்படுகிறது ..நீ
வாங்கித்தந்த கைபேசி ...!!!
இடைக்கிடையே ...
நீ அழைக்காமலே ...
அது அழைக்கச்சொல்லி ...
என்னை அழைக்கிறது ...!!!
பட்டு புடவை
ஏக்கத்துடன் பார்த்தாள்
ஏழை பெண் !
வேள்வியில் எரிகிறது
பட்டு புடவை !