பொம்மலாட்டம்

நாம்
நூல் கட்டிய பொம்மைகள்
நம் வாழ்க்கை ஒரு
பொம்மலாட்டம் !

ஆசை என்ற நூல்
நம் கையை ஏந்த சொல்கிறது !
அன்பு என்ற நூல்
நம் கைகளை கட்ட சொல்கிறது !

ஆடம்பரம் என்ற நூல்
நம்மை அகல கால் வைக்க சொல்கிறது!
அறிவு என்ற நூல்
நம்மை ஆணவம் கொள்ள சொல்கிறது!

கனவு என்ற நூல்
நம்மை காதலிக்க சொல்கிறது!
காமம் என்ற நூல்
நம்மை பேதலிக்க வைக்கிறது!

நம் ஆடும் ஆட்டம்
'பொம்மலாட்டம்' என தெரிந்தும்
மனம் 'தடு' மாறி 'தடம்' மாறுகிறது !

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (20-Jul-15, 8:00 pm)
பார்வை : 260

மேலே