என்னைத் தெரியுமா
என்னப்பா..
எங்க போயிட்டு
வரேன்னு ..
கேட்டா..
ஒரு மாதிரியா
பார்க்கிற..
உன் வயசத் தாண்டிதான்
நானும் வந்திருக்கேன்னு
சொன்னா..
"அப்பா..நான்
உங்களை விட
நல்லவன்னு "
சொல்ற மாதிரி
பார்க்கிற
பையனுக்கு
என்ன தெரியும் ..
என்னை பற்றி ..?