இயல்பு

இயல்பு

★வரம் தரும் தேவதைகள் பற்றி..
வரைந்துகொண்டிருந்தேன்..
கவிதை ஒன்று..!

★எந்தநேரம் பாத்தாலும்..
அந்த போனே நோண்டிக்ட்டு..இருக்கிய..
என்றால் மனைவி..!

★அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..
நான் கவிதை எழுதுவேன் என்று..!

★தெரிந்தால் சொல்லக்கூடும் இப்படி..

★அடுப்படிக்கு நேர ஒழுகுது ..ஓட்ட. மாத்துங்கனு..
மூனுநாளா சொல்றேன்..அதமாத்தலை..!

★மொளகா அரைக்காம கெடக்கு..

★பிள்ளையுட்டு ஸ்கூள்பேக் தைக்காமகெடக்கு..
இதல்லாம் விட்டுப்புட்டு இப்ப கவிதை ஒன்னுதான் கொறைச்ச..

க்..கவிதை எழுதுறாராம்..
க்....கவிதை..!
பெரிய கலாரசிகரு..!

எழுதியவர் : நிலாகண்ணன் (21-Jul-15, 11:10 am)
பார்வை : 117

மேலே