விலைமகள் சாயும் கதவு

விலைமகள் சாயும் கதவு
அவரவரை உவமையாக்கி
கொள்ளும் ஆடவர்கள் மத்தியில் ,
அவள்
முகத்தைக்காட்டி
உடம்பைமரைக்கும்
தாவணி கதவு அது ,
அந்தகதவு அருகில் நின்றுதான்
உடம்பை இனிப்பாக்கி மனதை ,
கசப்பாக்கி ஆடவர் தேடுவாள் அவள்
பணக்கட்டாயத்திர்க்காக ,
மன்க்கட்டாயபடுதிக்கொண்டவள்
அவள் ,
அவளை தாங்கி நிற்கும்
சுகம் தாங்கி கதவு அது ,
ஒரு கால் கொலுசொலியும்
மறுகை வளையல் ஒலியும்,
அந்த கதவு மறைவில் இருந்துதான்
எழும்பும் , அவள் ஒரு குழந்தைக்கு
தாயாக இருந்தால் கதவு
குழந்தை மறைப்பு சேலையாய் மாறும்
இந்தகதவு
பெண் ,ஆண் இணைப்பு செய்கிறது
பண கோளாறுக்கு பலியான
இவளை பருவக்கோளாறு எனாதிர்கள் ......

எழுதியவர் : (21-Jul-15, 8:51 pm)
பார்வை : 64

மேலே