கண்ணீரும் வேண்டாம் கல்லறையும் வேண்டாம்
இன்றைய இளம்கவிஞர் கள்பலர்
கவிதைகள் எழுதுவது காதல்,
காதல்தோல் விகண்ணீர், மரணம்,
கல்லறை என்றே காண்கிறேன்; 1
காதல் வயப்பட்ட எல்லோரும்
சொர்க்கம் பெறுவார்கள் என்பதும்,
காதல் தோல்வியுற்ற எல்லோரும்
கல்லறை செல்வதும்கட் டாயமில்லை! 2
காதல் வெற்றி யடைந்தாலும்,
காதல் தோல்வி யுற்றாலும்
அனைவர்க் கும்வாழ்க் கையுண்டு,
காதலிக்க ஒருவய துமுண்டு. 3
உன்னையும் உலகமும் புரிவது
இருபத்தி யோர்வயதிற் குப்பின்னர்!
காதல்செய்! இருபத்தி யோர்வயதிற்
குப்பின் காதலி!கண் ணீர்வேண்டாம்! 4
திருமணத்திற் குப்பின் மனைவியை
விருப்புடன் காதலி! ஒருபோதும்
தோல்வி கண்டு துவளாதே!
கல்லறையும் கனவிலும் வேண்டாம்!! 5