மூத்த குடி
இதோ இந்த மலைகள்தான் எங்கள் நடைகளையும் கிழிந்த உடைகளையும் அதிகம் பார்த்தது
இதோ இந்த மண்தான் எங்களின் ரத்தத்தினையும் பசியின் சத்ததினையும் அதிகம் கேட்டது
நாங்கள் என்ன பாவம் செய்தோம்
இயற்கைக்கு மூத்த மகளாக மகனாக பிறந்ததினை தவிர
பிச்சை எடுக்கவில்லை பிழைப்பு கேட்கவில்லை
பிணக்காடுகளில் பிரவேசிக்கின்றோம்
உண்டு கொழுத்தவனும் திண்டு பெருத்தவனும் கண்டு செல்ல நங்கள் என்ன காட்சிப்பொருளா
கடைசியாக ஒன்று மட்டும்
காசு வேண்டாம்
கைப்பிடி அரிசி வேண்டாம்
கல்வி மட்டும் கொடுங்கள் கல்வி கொடுங்கள்