நிலா
ஆயிரம் ஆயிரம்
தாண்டும்,
உன் கவி
பாடிய,
பாடும்,
பாடும்,
கூட்டம்..
நீ மட்டும்
கொள்ளவில்லை நாட்டம்..
நடை பழகும்
மழலைக்கெல்லாம்
காதல் உன் மீது..
அது வயிறு நிறைத்தது
உன் முகம்..
ஈன்றவள் மனம் நிறைத்தது
உன் முகம்..
பாரினில் பல சோறு,
கண்டத்திற்கு கண்டம்
அது வேறு..
பழைய சோறு
பஞ்சத்தில்,
பருப்பு சோறு
பசுமையில்..
ஆன போதும்
ஏழைக்கும் ஒரே சோறு,
ஏக போகனக்கும் ஒரே சோறு,
கண்டம் கடந்தாலும் ஒரே சோறு,
கைக்குள் நில்லாத
உன் சோறு..
சித்திரையிலும்
நீ வந்தாய்..
நித்திரையிலும்
நீ வந்தாய்..
நேற்றும் நீ..
இன்றும் நீ..
நாளையும் நீ..
நம்பிக்கையுடன்
என் நித்திரை..
-நிலா