என் குட்டிமாவுக்கு

குதித்தாடும் மழலையென என்
குட்டி தேவதை !

குறும்புப் பேச்சின் அழகில்
அகிலமும் அடங்குமே !

அன்பென்ற மொழியின் வார்த்தை அல்ல
கவிதை வடிவம் அவள் !

கட்டுப்பட்டவன் நான் அவள்
கட்டளைகளுக்கு மட்டும் !

கவலை மறந்தவன் நான் என்
கரம் பிடித்து அவள் நடக்கையில் மட்டும் !

துளிகூட வலித்ததில்லை என் கன்னங்கள்
அவள் முத்தங்களை சுமக்கும்போது மட்டும் !

இப்படி இனித்ததில்லை எதுவும்
அண்ணா எனும் அவள் அழைப்பைத் தவிர !

ஏனோ தெரியவில்லை
இல்லாமல் போனது அவளுகென்று ஓரிடம்
என் தாயின் கருவறையில்!

ஆனாலும்கூட அவள் அன்பு
என்றும்
இத் தமயனிடம் !

எத்தனை நாள் தனிமை
தவம் எனக்கு !
வரமாய் வந்தவள்
என் குட்டிமா !
என் தங்கை !

எழுதியவர் : முகில் (23-Jul-15, 8:54 pm)
பார்வை : 1565

மேலே