முழுதாய் -கார்த்திகா

மிகச் சாதாரணமாய்த்
தொடங்கிய இந்நாள்
மார் தொட்ட மனோரஞ்சிதத்தில்
சிலிர்த்தெழுந்த நிலமதில்
கரம் பட்ட வெட்கத்தால்
கூடு ஒதுங்கிய சிறு நத்தையில்
புன்சிரிப்பில் அடங்கிய
பிள்ளையின் அழுகையில்
இரம்மியம் ஒன்றிற்குள் முழுதாய்
தன்னை அகப்படுத்திக் கொண்டது!!

எழுதியவர் : கார்த்திகா AK (24-Jul-15, 11:45 am)
பார்வை : 137

மேலே