ஏகபாத அந்தாதி-5
கூத்திடு மலையனே ஆலங் குடியனே
கூத்திடு மலையனே ஆலங் குடியனே
கூத்திடு மலையனே ஆலங் குடியனே
கூத்திடு மலையனே ஆலங் குடியனே
கூத்திடும் மலையனே கூத்திடும் இமய மலையனே , ஆலங் குடியனே
கூத்திடும் அலையனே கூத்திடும் (கங்கை நதி) அலையனே, ஆலங் குடியனே
கூத்திடும் மலையனே ஆலங் குடியனே(ஆலகால விஷத்தினை குடித்தவனே
கூத்திடும் மலையனே, ஆலங் குடியனே(ஆல மரத்தின் அடியில் அமர்ந்தவனே)
கூத்திடும் மலையனே, கூத்திடும் மலையா? , அலை கூத்திடும் மலையாம் குற்றாலங் குடியனே குற்றாலத்தில் அம்ர்ந்தவனே
கூத்திடும் மலையனே, ஆலங் குடியனே(ஆலங்குடியில் அமர்ந்தவனே