ஏகபாத அந்தாதி-4
அம்பல மாறு மதிசயக் கூத்தா
அம்பல மாறு மதிசயக் கூத்தா
அம்பல மாறு மதிசயக் கூத்தா
அம்பல மாறு மதிசயக் கூத்தா
அம்பலம் ஆறா இல்லையே ஐந்தல்லாவா, அம்பலம் 6, ஆதாரங்களை குறிக்கிறது அதில் அதிசயக் கூத்துதானே
அம்பல மாறும் அதிசயக் கூத்துதான் வெவ்வேறு (மாறும்) அம்பலங்களில் மாறும் அதிசயக்கூத்துதான்
ஓரிடத்திலே ஆனந்தக்கூத்து மற்றோரிடத்திலே ஊர்த்துவ கூத்து அம்பலந்தோறும் மாறு மதிசயக் கூத்தா
அதென்ன மாறுங்கூத்தை காட்ட முடியுமா? முடியும் கால் மாறுங்கூத்தை பார்க்கின்றோமே மதுரையிலே
அதுவும் அம்பல மாறு மதிசயக் கூத்துத்தானே
அம்பல மாறும் அதிசயக் கூத்தா, காலனை வென்றானே அது அதி+ சயக் கூத்தல்லவா! வெற்றியின் வெற்றியல்லவா
அம்பிகையை வென்றானே அதுவும் அதி+சயக் கூத்தல்லவா?
(மாறும்) வெவ்வேறு அம்பலங்களில் மாறும் அதிசயக்கூத்துதானே