முயன்றிடு -மடந்தை ஜெபக்குமார்
நீரில் மிதந்து வரும் இலைகள்
இளைப்பாற நினைத்தால்
நீந்தி வரும் எறும்புகளுக்கு யார் உதவுவது ?
காக்கை கூடுகள் எல்லாம்
போர்கொடி தூக்கினால்
குயில்களின் நிலை!
மரங்கள் எல்லாம்
ஓய்வு எடுத்தால்
மனிதனுக்கு நாசி ஏது?
மூங்கில்கல் எல்லாம் மூழ்கி போக்கினால்
மூத்த ஞானிகளுக்கு
புல்லாங்குழல் ஏது ?
எறும்பு ஏறும் பாறை
தேயவில்லை என்றால் பின்னால் வரும்
எறும்புகளுக்கு பாதை ஏது?
இமயமலை ஏறினாலும்
இதயத்தில் முயற்ச்சி இருந்தால் மட்டுமே தோழா
உன்னாலும்,என்னாலும் உறுதியோடு வெல்ல முடியும்