நண்பனே நண்பனே
நண்பனே நண்பனே நம்பிக்கை கொளவாயோ
நம்பிக்கை நீயும் கொண்டால்
நம் கைகள் வெல்லும் பாராயோ
நண்பனே நண்பனே நம்பிக்கை கொள்வாயோ
வருத்தங்கள் எல்லாம்
வந்து போகும் சொந்தம் போல
கவலைகளை எல்லாம்
காலம் மாற்றும் கானல் போல
விழிகள் மூடி நீ இருந்தால்
விடியல் என்றும் கிடையாது
கவலைகள் எல்லாம் நாம் கற்றுக் கொள்ளதான்
கண்ணீரும் இங்கே நாம் செலவு செய்யதான்
கனியிலும் கசப்புண்டு தேனிலும் கசப்புண்டு
அதனில்தானே மருந்துமுண்டு
சோதனை தினமுண்டு தோல்விகள் பலவுண்டு
அதனில்தானே பாடமுண்டு
பாடமும் நீதான் கற்றுக்கொள்
பாரினை நீதான் வெற்றிக்கொள்
கவலைகள் பலவுண்டு கனவுகள் பலவுண்டு
தோல்வி கண்டு துவழாதே
தோளில் தூக்கிப் போடாதே
கனவுகள் நனவாகும் வேளை
கவலைகள் அது மாறும் நாளை
கதிரும் துயில் கலைத்தால் விடியலாகும்
விதைகள் துயில் கலைத்தால் விருட்சமாகும்
அறிவை துயில் கலைத்தால் வெற்றியாகும்
உறங்கும் அறிவை விழிக்கச் செய்திடு
உன் கனவை அதனால் பலிக்கச் செய்திடு
மலைத்து நீயும் நின்றிருந்தால்
மடுவும் கூட மலையாகும்
மனதினில் நீயும் தனல் கொண்டால்
மலையும் கூட மணலாகும்
லட்சிய விதைகளை மனதில் விதைத்திடு
வெற்றியின் பூக்களை நாளை பறித்திடு
சிந்தையை நீயும் செலவு செய்து
சில கவிதைகள் நீதான் வரைந்துக் கொள்
சிரிப்பினை நீயும் செலவு செய்து
ஆயுளின் நீளம் கூட்டிக் கொள்
அன்பினை நீயும் செலவு செய்து
ஆயிரம் இதயம் வாங்கிக் கொள்
அறிவினை நீயும் செலவு செய்து
அகிலத்தை இன்றே வெற்றிக் கொள்
நாடி தளர்ந்து போனாலும்
நம்பிக்கை தளர்ந்து போகாதே
நம்பிக்கை நம்மில் இருக்கும் மட்டும்
நம் கைகள் வெல்லும் மறக்காதே
உன் துயரை எல்லாம் தூக்கில் போட்டிடு
உன் அறிவை கொண்டுதான்
உலகை வென்றிடு
கடிகாரம் நிற்க கூடும்
காலம் அது நிற்குமா
காலத்தோடு போட்டியிட்டு
உன் கால்கள் இனி ஓடட்டும்
காலச்சுவடின் பக்கத்தில்
உன் பெயரை பொறித்துக் கொள்ளட்டும்
நண்பனே.. நண்பனே..
நம்பிக்கை கொள்வாயோ...