ஞாபகப்பறவை

உன் நினைவுகளை அடுக்கி
என் இதயக்கூட்டினில்
தீ மூட்டியதொரு ஞாபகப்பறவை..

அதில் சுடர்விட்டு எரிந்த
என் மனச்சருகின் வாசம்
காதல் காற்றின் ஒரு சோக கீதம்..

தணலாய் மாறிய தேகம்
நினைவுப் புகையைக் கக்கிக் கொண்டிருக்க
என் அந்தரங்கம் யாவும்
நித்திரையை விரட்டிக் கொண்டிருந்தன..

தனிமை அரண்யத்தில்
மலரிடம் காதல் பேசும் தென்றலாய்
என்னிடம் உரையாடியது
உன் பார்வைகளின் மௌனங்கள்.
வெறும் பிரதிகளாய்..

பார்வைகளையும் நினைவுகளையும்
மட்டும் என்னிடம் விடுத்து
கானல் நிலவாய் மறைந்தவளே..

இன்னும் ஒரு முறை
உன்னில் விழுந்து தொலைந்து போகிறேன்..!
கண்ணோரம் பனித்துளியாய்
என் காதல் சின்னத்துடன்..!!

எழுதியவர் : (25-Jul-15, 6:19 am)
பார்வை : 99

மேலே